குண்டாக இருப்பவர்கள் தங்களின் புகைப்படத்தை ஒல்லியாக மாற்றுவது எப்படி ?


சில நண்பர்கள் குண்டாக இருப்பார்கள். அவர்களது புகைப்படமும் குண்டாகவே இருக்கும். இவர்களை நேரில் ஒல்லியாக்க முடியாவிட்டாலும் , புகைப்படத்தில் ஒல்லியாக்க முடியும்.

இதைனை செய்வதற்கு Online இல் ஒரு வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை செய்வது மிகவும் எளிது. இதற்கான விளக்கத்தை கீழே காணலாம்.

முதலில் ஒரு குண்டாக உள்ள நபரின் புகைப்படத்தை இந்த தளத்தில் உள்ளீடு செய்யுங்கள்.

சில நொடிகளில் உங்களுக்கு எவ்வளவு கிலோ தேவையோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள்.


அவ்வளவுதான். இனி உங்களுக்கு இந்த Image தேைை என்றால் ? Final Image இன் மேல் வலுு பற க்ளிக் செய்து சேமித்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்பட்டுள்ளது.


பல மில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்டு முன்னணியில் திகழும் சமூக வலைத்தளமான பேஸ்புக், மாற்றம் ஒன்றினை கொண்டுவந்துள்ளது.

அதாவது ஆரம்ப காலத்தில் இத்தளத்தில் கணக்கினை தொடங்குபவர்கள் ஆண் அல்லது பெண் என்ற வகையினை தெரிவு செய்யும் வசதி காணப்பட்டது. 

பின் காலப்போக்கில் திருநங்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. 

தற்போது 70 இற்கும் மேற்பட்ட வகைகளை, பேஸ்புக் நிறுவனம் தந்துள்ளது.
இது பிரித்தானியாவில் உள்ள பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மவுஸ் பற்றிய சில குறிப்புக்கள்கணனி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.

குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
இதோ அதன் பயன்கள்:

பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட,Mouse +Shift Key பயன்படுத்த இடம் தருகின்றன.

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர்,Shift Keyஅழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வகையில் Alt Key வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.

டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும். டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது.

இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம்.

பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.

இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.

Shift Key அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம்.

சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம். இரண்டு மற்றும் மூன்று முறை Click: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.

Smart Phone பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படின்னா இதப் படிங்க
உலகம் உங்கள் கையில் என்ற அளவுக்கு ஸ்மார்ட் கைப்பேசியின் செயல்பாடுகள் உள்ளது.

வீட்டிலிருந்த படியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் கைப்பேசி மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது.

உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஸ்மார்ட் கைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகை கைப்பேசிகளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட் கைப்பேசியில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது நமது கைப்பேசி உள்ள தகவல்களை சமூக விரோதிகள் ஹேக் செய்து எடுக்க எளிதாக மாறிவிடுகிறது. குறிப்பாக மால்வேர் புரோகிராம்களில் எளிதாக ஹேக் செய்துவிடுகின்றனர்.

இதனால் கைப்பேசியில் நாம் பதிவு செய்து வைத்த ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதாக திருடப்படுகிறது, மேலும் இணையதளத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொடர்ந்து விளம்பர செய்திகளை திரைக்கு கொண்டுவந்து தொந்தரவு கொடுக்கும்.

மேலும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதன் மூலம், சமூக விரோதிகள் உங்களின் அடையாளத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் கைப்பேசியை ஹேக் செய்து, அதை செயலிழக்க வைக்கலாம். இவற்றை தடுக்க ஸ்மார்ட் கைப்பேசியில் உரிய ஆன்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தேவையில்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.


Slow Connection இல் Youtube வீடியோக்கள் விரைவாக Buffering ஆக வேண்டுமா?

 அதிகமான இணையதளப் பயனாளர்கள் விரும்பிப்பார்ப்பது யுடியூப் வீடியோக்கள்தான். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் இதில் வீடியோ பார்ப்பதென்றால் சிறிது நேரம் கழித்துதான் பார்க்க முடியும்.காரணம் வீடியோ முழுவதும் Buffer ஆவதற்கு சிறிய நேரம் எடுத்துக்கொள்ளும். முழுமையான வீடியோவைப் பார்க்க வீடியோ முழுவதும் Buffer ஆகும்வரை காத்திருக்க வேண்டும்.

இனி அதுபோல காத்திருக்கத் தேவையில்லை.
யுடியூப் வீடியோக்கள் விட்டு விட்டு பஃபர் ஆகாமல் தொடர்ச்சியாக பஃபர் ஆவதற்கென்ன ஒரு எக்ஸ்ட்டன்சன் (YouTube center extension) உள்ளது. கூகிள் குரோம், ஃபையர் ஃபாக்ஸ், ஓபரா, ஓபரா பழைய திப்பு, மேக்ஸ்தான், சஃபாரி என அனைத்து பிரௌசர்களுக்கும் இந்த எக்ஸ்டன்சன் கிடைக்கிறது.
இதை டவுன்லோட் செய்து உங்களுடைய பிரௌசரில் இணைத்துக்கொண்டால், YouTube Video க்கள் தொடர்ச்சியாக பஃபர் ஆகி, உடனடியாக உங்களுக்கு வீடியோ தொடர்ச்சியாக பிளே ஆகும். பயனுள்ள இந்த எக்ஸ்டன்சனை நீங்களும் தரவிறக்கம் செய்து தொடர்ந்து யுடியூப் வீடியோக்கள் பார்த்து மகிழுங்கள்.
இந்த முகவரியில் சென்று உங்கள் பிரௌசருக்கான Extension ஐ நிறுவிக்கொள்ளுங்கள். டவுன்லோட் செய்ய சுட்டி கீழே.